வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Date:

இன்றையதினம் (02) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...