பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !
பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்குள்ள 3 பல்கலைக்கழகங்களில் 50 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கின்றனர்.
குறித்த மாணவர்கள் விரும்பினால் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.