உலகின் முதல் நிலை பணக்காரரான பிரபல அமெரிக்க வர்த்தகர் எலோன் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘ஸ்பேஸ் எக்ஸின் செயற்கைக்கோள் பிரிவான Starlinkஇன் இணையச் சேவைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் பூர்வாங்க அனுமதியை வழங்கியுள்ளது.
இதற்காக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்து, அதன் மூலம் அரசாங்கம் செயல்முறையை துரிதப்படுத்தியது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Starlink செயல்பாடுகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
“இதற்கான பணிகளை முடிக்க ஜூலை இறுதி வரை கால அவகாசம் அளித்துள்ளோம்.
இருப்பினும், பணியை முன்கூட்டியே முடிக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸின் உரிமையாளர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சேவையை செயல்படுத்த இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என்று பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.