அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 74 ஆவது வருடாந்த தேசிய மாநாடு ஜுன் 29 ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) அவர்களும் கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி எல்.டி.பி.தெஹிதெனிய வர்களும் கலந்துகொண்டார்கள்.
வை.எம்.எம்.ஏ.யின் தேசியத்தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.