சிறுவர்கள் மத்தியில் ஆஸ்துமா:முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

Date:

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் இருமல் உள்ள சிறுவர்கள் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

குறித்த தகவல்களை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்புளுவென்சா மற்றும் சாதாரண வைரஸ் தொற்று என்பன தற்போது பரவி வரும் நிலையில், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய காலத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவி வருவதால், அனைவரும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதால் குறித்த வைரஸ் தொற்று பரவலடைவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனவும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...