தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் திடீா் அறிவிப்பு: பின்னணியில் என்ன நடந்தது?

Date:

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோ பைடன், திடீரென்று தனது முடிவை மாற்றி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ஜோ பைடன் விலகியதற்கு கட்சியினர் கொடுத்த கடுமையான அழுத்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் களம் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு ஜோ பைடனின் இந்த திடீர் அறிவிப்பு ஜனநாயக கட்சியினருக்கே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் ஜோ பைடன் சனிக்கிழமை இரவு வரை அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவது இல்லை என விடாப்பிடியாய் கூறி வந்து இருக்கிறார்.

ஆனால், ஒரே நாளில் தனது முடிவை தலைகீழாக மாற்றிய பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசையும் முன்மொழிந்து இருக்கிறார்.

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து திடீரென விலகியிருப்பதால் மீண்டும் ஜனநாயக கட்சியினர் கூடி புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். பெரும்பாலும் கமலா ஹாரிஸுகே இதில் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது போக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரும் கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக கூறினர்.

இதனால், அடுத்தடுத்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனது டெலாவர் இல்லத்தில் தனிமையில் ஓய்வு எடுத்து வந்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்து இருக்கிறார்.

Popular

More like this
Related

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...