பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹாவின் செயற்பாடுகளை கௌரவித்து அம்மாணவிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்துடன் இணைந்து கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் நடாத்திய நிகழ்வில் அம்மாணவிக்கு “Brilliant Child Award” என்ற விருது வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை அல் -அர்சத் ம.வித் தரம் 7 ல் கல்வி கற்று வரும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா தனது 10 வயதிலிருந்து மாவட்டமட்ட, தேசிய மட்ட, சர்வதேச மட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளினையும், கௌரவ பட்டங்களையும் பெற்றுக் கொண்ட சிறுமியாவார்.
10 இலட்சம் நபர்களினை இலக்காய் கொண்டு “சுற்றுச் சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தி வரும் ஆசிய நாடுகளில் மிக வயது குறைந்த சிறுமி” என்ற சாதனையாளர் விருதுக்காக பரித்துரை செய்யப்பட்டுள்ளார்.