இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Date:

நாட்டிற்கு கட்டம் கட்டமாக இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அடுத்த மூன்று மாதங்களில் 3,000 மெற்றிக் தொன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டி இருந்தார்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் (Ministry of Agriculture) அமைச்சர் மற்றும் வர்த்தக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் முன்வைத்த கூட்டு யோசனை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சு சமர்ப்பித்திருந்த நிலையில் இன்று அமைச்சரவை குறித்த அனுமதி வழங்கி உள்ளது.

 

Popular

More like this
Related

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...