இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5, 000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம்

Date:

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும் என சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இந்த நாட்களில் தசை வலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இன்று இலங்கை வரும் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் ஜனாதிபதி To Lam இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....

பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டல குழப்ப நிலை விருத்தியடைந்து வருவதால் எதிர்வரும்...

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...