கட்டுநாயக்காவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர  பல்வகை போக்குவரத்து நிலையத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை நேற்று (19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பேருந்து சேவை கடந்த 15ஆம் திகதி தொடங்கப்பட்ட நிலையில், அதற்கெதிராக அன்றே போராட்டங்களும் நடைபெற்றன.

குறிப்பாக கோட்டை தனியார் சொகுசு பேருந்து சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சேவையை புறக்கணிக்க ஆரம்பித்தது.

அதுமட்டுமின்றி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றிற்குச் சென்று தங்களது எதிர்ப்பை முன்வைத்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய டாக்சி சாரதிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அனைத்தையும் கருத்திற் கொண்டு 04 நாட்களுக்கு பின்னர் சொகுசு பேருந்து சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட சொகுசு பேருந்துகளுக்கு பதிலாக 10 பேருந்துகள் விமான நிலையத்தில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர  பல்வகை போக்குவரத்து நிலையம் வரை இயக்கப்படும் என விமான நிலைய தனியார் சொகுசு பேருந்து சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர தெரிவித்தார்.

Popular

More like this
Related

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...

LPL தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை...