கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கடமைகளையும் எந்தவித தடையுமின்றி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பு இதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த விடயம் குறித்து அவர்களுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்கவிடம்  வினவிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கிராம உத்தியோகத்தர்கள் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இன்று (12) மற்றும் நாளை (13) விலகியிருப்பதுடன் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைக்கான வாரமாக இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் சேவை யாப்புக்கு தமது கோரிக்கைகள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...