எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டின் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதுடன், வன்முறைகள் மற்றும் முரண்பாடுகளை தவிர்க்க பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை நீக்குவதற்காக 1500 தற்காலிக தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் மையப்படுத்தி பாதுகாப்பு செயற்றிட்டமொன்று வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 54ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.