நாட்டிற்கு கட்டம் கட்டமாக இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அடுத்த மூன்று மாதங்களில் 3,000 மெற்றிக் தொன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டி இருந்தார்.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் (Ministry of Agriculture) அமைச்சர் மற்றும் வர்த்தக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் முன்வைத்த கூட்டு யோசனை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சு சமர்ப்பித்திருந்த நிலையில் இன்று அமைச்சரவை குறித்த அனுமதி வழங்கி உள்ளது.