சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதற்கமைய, இன்று (28) பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் (28) நாட்டின் வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமெனவும், அதேவேளை மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்