இலங்கையின் சுழலில் வீழ்ந்தது இந்திய அணி

Date:

இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச  கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Jeffrey Vandersay 6 விக்கெட்டுக்களையும், Charith Asalanka 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிட்டதக்கது

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...