இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 78வது ஆண்டு விழா !

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 78வது ஆண்டு  விழாவை கொண்டாடியது.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ் அவர்கள் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் வேளையில் பகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செய்திகள் வாசிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல்
(ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ் அவர்கள் இந்நாளின் சிறப்பினை குறிப்பிட்டதோடு இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில், நமது இராஜதந்திர பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை தொடர்ந்து வளர்த்து வரும் அதே வேளையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் வர்த்தகம் மற்றும் இருதரப்பு முதலீட்டை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார இணைப்புகளை விரிவுபடுத்தவும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

இராஜதந்திர உறுப்பினர்கள், பாகிஸ்தான் சமூகத்தினர், உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர், உள்ளூர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...