படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்குகள் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் தெஹ்ரானில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், தொழுகைக்கு பின்னர் தெருக்களில் பொது மக்கள் அணிவகுத்து நின்று அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த கொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்துள்ளதால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குக்குப் பிறகு இஸ்மாயில் ஹனியேவின் உடல் கத்தாரின் தலைநகரான தோஹாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளதுடன் ஈரானில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.
ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் இறுதி ஊர்வலத்தில் உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.