இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலம் தெஹ்ரானில் ஆரம்பம்: கத்தாரில் நல்லடக்கம்

Date:

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்குகள் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் தெஹ்ரானில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், தொழுகைக்கு பின்னர் தெருக்களில் பொது மக்கள் அணிவகுத்து நின்று அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த கொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்துள்ளதால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குக்குப் பிறகு இஸ்மாயில் ஹனியேவின் உடல் கத்தாரின் தலைநகரான தோஹாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளதுடன் ஈரானில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் இறுதி ஊர்வலத்தில் உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...