ஜெருசலத்தில் புதிய கொன்சியூலர் அலுவலகம் திறக்கவிருப்பதாக பரவும் தகவல் பொய்யானது: ஜம்இயய்துல் உலமாவுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்
இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சியூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று (27) சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த விடயத்தை ஜனாதிபதி தெரிவித்தார்.
இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெருசலத்தில் கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும்,அவர் தெரிவித்தார்
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.