ஈரானின் அச்சுறுத்தல்: அமெரிக்க நேச நாடுகள் யுத்த நிறுத்தத்தில் தீவிரம்; இணங்க மறுக்கும் ஹமாஸ்!

Date:

இஸ்ரேலைத் தாக்குவதாக ஈரான் அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு மத்தியில் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இது தொடர்பில் இந்த ஐந்து நாடுகளினதும் தலைவர்கள் இணைந்து திங்களன்று (12) வெளியிட்ட அறிக்கையில்,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களான நாங்கள் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதித்தோம்.

பதட்டங்களைத் தணிக்கவும், காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகலாய் விடுதலை செய்யும் ஒப்பந்தத்தை எட்டவும் நடந்து வரும் முயற்சிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்தோம். ஜனாதிபதி பைடென், எகிப்தின் ஜனாதிபதி சிசி மற்றும் கத்தாரின் அமீர் தமீம் ஆகியோரின் கூட்டு அழைப்பை இந்த வாரத்தின் பிற்பகுதியில் புதுப்பிக்கும் வகையில், ஒப்பந்தத்தை விரைவில் முடிப்பதற்கான நோக்கத்துடன் நாங்கள் ஒப்புதல் அளித்தோம், இனி இழப்பதற்கு நேரமில்லை என்பதை வலியுறுத்தினோம்.

அனைத்து தரப்பினரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கூடுதலாக, நிவாரணங்களும் உதவிகளும் தடையின்றி விநியோகிக்கப்பட வேண்டும்.

ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவித்தோம்.

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுத்ததோடு அத்தகைய தாக்குதலினால் வரும் பிராந்திய பாதுகாப்பிற்கான கடுமையான விளைவுகள் குறித்தும் விவாதித்தோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இழுபறியில் இருக்கும் காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை கத்தார் முன்னின்று நடத்தவுள்ளது.இது ஈரான் இஸ்ரேலைத் தாக்குவதைத் தடுக்கும் எனவும் ஒரு பரந்த போரைத் தவிர்க்கும் எனவும் அமெரிக்கா நம்புகிறது.

முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 40,000 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு கூறியுள்ள சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் டஜன் கணக்கான மக்களைக் கொன்ற கான் யூனிஸ் மற்றும் காசா நகர குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்த நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் கலந்து கொள்வதை உறுதி செய்த போதும் ஹமாஸ் இதில் கலந்து கொள்ள மறுத்திருக்கிறது.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...