ரிஷாத் கட்சி சஜித்துக்கு; அங்கத்தவர் பலர் ரணிலுக்கு ஆதரவு!

Date:

 ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எஸ்.எம்.எம். முஷாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹிம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள  அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்த மூன்று உறுப்பினர்களும்  ரணிலுக்கு  ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

இதன்படி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...

லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன,...

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரான்   இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...