துருக்கி விமானசேவை சீனாவிடமிருந்து (A-350 Airbus ) விமானங்கள் மூன்றை கொள்வனவு செய்திருக்கிறது.
இதில் விசேடம் யாதெனில் சீனாவுக்கு வெளியில் சீன நாணயத்திலேயே இவ்வாறு கொள்வனவு செய்வது முதல் தடவையாகும்.
துருக்கி விமான சேவை தனது நாட்டு நாணயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த நடைமுறையை பின்பற்றுவதாக அதன் தலைவர் அஹமத் புலாத் தெரிவித்துள்ளார்.