ஜூலையில் பணவீக்கம் 2.4 சதவீதமாக உயர்வு

Date:

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் 1.4 பதிவான உணவுப்பணவீக்கம் ஜூலையில் 1.5 சதவீதமாகவும்,ஜூன் மாதம் 1.8 சதவீதமாகப் பதிவான உணவல்லாப் பணவீக்கம் ஜூலையில் 2.8 சதவீதமாகவும் உயர்வடைந்தன.

மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்னின் மாதாந்த மாற்றம் ஜுலையில் 0.44 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 0.03 சதவீத அதிகரிப்பும், உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 0.47 சதவீத வீழ்ச்சியும் காரணமாக அமைந்தன.

பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 0.44 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

இது இவ்வாறிருக்க பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடைந்து, நடுத்தர காலத்தில் மட்டத்துக்கு மேல் பதிவாகும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...