இண்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ எயர்லைன்ஸ் விமானம், மாலை 3.10 மணியளவில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணியளவில் மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது