ஜனாதிபதிக்கு சிலிண்டர் சின்னம்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் தேர்தல் திணைக்களத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது.

இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலமாகவும் 9 மணிமுதல் 11.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கும் காலமாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன் பிரகாரம் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். என்றாலும், 39 வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவரதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் 3 ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. என்றாலும், தேர்தல் சட்டத்தின் 14, 15 பிரிவுகளின் கீழ் குறித்த 3 ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இதேவேளை தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை...

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...