ஜப்பானில் இன்று வியாழக்கிழமை சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGC) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஜப்பானிய தீவுகளான கியுஷு மற்றும் ஷிகோகுவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஜப்பானின் தெற்குப் பகுதியை சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. .
தீவு நாடான ஜப்பான் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய இடத்தில் பூகோள ரீதியாக அமைந்துள்ளது. இதனால் அங்கு ஆண்டுக்கு சுமா 1,500 நாட்கள் நடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஜப்பானில் உள்ள வீடுகளும் இதற்கு ஏற்றவாறு தான் கட்டப்பட்டுள்ளது.
சிறியளவிலான நிலநடுக்கங்கள் அங்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இருந்தாலும் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும் போது அங்கு கடுமையான பாதிப்பு நிகழ்ந்துவிடும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 260 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் முதல் 10 நாட்களில் மட்டும் சுமார் 1,300 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதல் மக்கள் பதறியடித்துக்கொண்டே வீதிக்கு ஓடி வந்தனர். வீடுகளை விட்டு வெளியேறினர். சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுவரை நிலநடுக்கத்தால் என்ன பாதிப்புகள் ஏற்பட்டது என்று தகவல்கள் இல்லை.