தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி :வெளியாகியுள்ள அறிவிப்பு

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வெளியிடுதல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், காவல்துறையினருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது கடந்த 09 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

 

 

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...