இலங்கையைச் சேர்ந்த மொஹமத் அப்லல் (Aflal Ahmed) என்பவர் துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதையொட்டி துருக்கி தலைநகரான அங்காரவில் உள்ள இலங்கைத் தூதுவருடைய உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இலங்கை சட்டத்தின் பிரகாரம் திருமணப்பதிவு இடம்பெற்றது.
இலங்கை முறையிலான ஒரு திருமணப்பதிவு முதற்தடவையாக இலங்கை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அங்காரவில் உள்ள இலங்கை தூதுரகம் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.
இவ்வாறு திருமணம் செய்த புதுமண தம்பதிகளை நாமும் வாழ்த்துகின்றோம்.