தரமான உலமாக்களையும் ஹாபிழ்களையும் உருவாக்கி வரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தனது, 6ஆவது பட்டமளிப்பு விழாவை ஆகஸ்ட் 3ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடியது.
கல்லூரியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான உஸ்தாத் எம். ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 61 ஆலிம்களும் 29 ஹாபிழ்களும் பட்டம் பெற்றனர்.
சவூதி அரேபிய நஜ்ரான் பல்கலைக்கழக போராசிரியர் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி யு.எல்.அஷ்ரப் இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.