மாணவர் அமைப்பினரின் தீவிர போராட்டத்தால் பங்களாதேஷின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1971 பாகிஸ்தான் போரால் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக மாணவர் அமைப்பினர் அண்மையில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாணவர் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.