100 உயிர்களை பறித்த மூன்று குண்டுகள்: காசா பள்ளியை குறிவைத்த இஸ்ரேல்!

Date:

காசாவில் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதிஇஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

போர் தொடங்கி 300 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில்,  போரில் இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.

23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளியில் இருந்தால், தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று பொதுமக்கள் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்தனர்.

ஆனால் இஸ்ரேல் விமானப்படை இந்த பள்ளியை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து காசா அதிகாரிகள் கூறுகையில், “தராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள அல்-தபின் பள்ளியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 907 கிலோ எடை கொண்ட மூன்று குண்டுகள் இப்பள்ளி மீது விழுந்துள்ளது. இது கொடூரமான படுகொலை” என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...