பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் பதவியேற்பு: 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைப்பு

Date:

நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக்கொண்டது.

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.

இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதனால் இடைக்கால அரசு அமையும் என பங்களாதேஷ ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று இரவு பங்களாதேஷில்  முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.

சுதந்திர போராட்ட வீரர் பரூக்-இ-ஆஸாம், மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பதவி ஏற்றனர். முகமது யூனுஸ் தலைமையில் 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...