பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்து சிதறி பெரும் விபத்து

Date:

பிரேசிலின் (Brazil) சாவ் பாலோவில் (Sao Paulo) பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தின் போது, குறித்த விமானத்தில் 62  பயணிகள் உட்பட 4 விமான நிறுவன ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விமானம் Vinhedo நகரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருப்பதை அந்நாட்டு தீயணைப்பு படையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த ATR-72 விமானமானது பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலிருந்து சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான கேரோலியோஸ் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் படி, விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 62 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தெற்கு பிரேசிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விபத்து குறித்து தகவல் தெரிவித்த நிலையில், அங்கிருந்தவர்களிடம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை வைத்தார். இந்த விபத்து குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...