அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் ஜுலை 30 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர்.
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் ஏற்பாட்டில் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் ஷாம் நவாஸினால் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
முஸ்லிம் இளைஞர்களை சமூக மற்றும் தேசிய விவகாரங்களில் பங்கெடுக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்கும் சம்மேளனத்தின் பணிகளில் ஒரு பகுதியாக இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த விஜயத்தின் போது பாராளுமன்றத்தைச் சுற்றி பார்வையிட்ட அங்கத்தவர்கள் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றனர்.
நாட்டை வளப்படுத்தும் செயற்பாடுகளிலும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பிலும் இளைஞர்களைப் பயிற்றுவிப்பது தொடர்பான விடயங்களும் இந்த நிகழ்வின் போது கலந்துரையாடப்பட்டன.