மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா !

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக மொட்டுக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. இது தொடர்பான நிறுவன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சித் தலைமையகத்தில் எதிர்வரும் நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இந்த வாரத்திற்கு முன்னர் அறிவிக்கத் தயாராக இருந்த போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக அது தாமதமானது.

ஜனாதிபதி வேட்பாளராக காத்திருக்கும் நால்வர் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் தம்மிக்க பெரேராவுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...