முஸ்லீம் லீக் வாலிப முன்னணி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு விஜயம்

Date:

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் ஜுலை 30 ஆம் திகதி  பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர்.

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் ஏற்பாட்டில் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் ஷாம் நவாஸினால் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

முஸ்லிம் இளைஞர்களை சமூக மற்றும் தேசிய விவகாரங்களில் பங்கெடுக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்கும் சம்மேளனத்தின் பணிகளில் ஒரு பகுதியாக இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த விஜயத்தின் போது பாராளுமன்றத்தைச் சுற்றி பார்வையிட்ட அங்கத்தவர்கள் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றனர்.

நாட்டை வளப்படுத்தும் செயற்பாடுகளிலும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பிலும் இளைஞர்களைப் பயிற்றுவிப்பது தொடர்பான விடயங்களும் இந்த நிகழ்வின் போது கலந்துரையாடப்பட்டன.

Popular

More like this
Related

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...