வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு இராணுவ வீரர்கள் படுகாயம்

Date:

 

வெல்லவாய ஊவா குடாஓயா கமாண்டோ ரெஜிமெண்ட் பயிற்சி நிலையத்தில் இன்று சனிக்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான் சாகச நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில்  இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்று வெளியேறும் இராணுவ வீரர்களுக்காக விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, வான் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு வீரர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒருவரது பரசூட் மரங்கள் நிறைந்த பகுதியிலும் மற்றையவரது பரசூட் தரையிலும் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த இரண்டு வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...