வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த கஞ்சிபானை இம்ரான் கைது

Date:

கிளப் வசந்த என்ற  வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கஞ்சிபானை இம்ரான் ஐரோப்பிய நாடான பெலாரஸிலும், லோகு பட்டி துபாயிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரானால் திட்டமிடப்பட்டதாகவும், டுபாயைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆதாரங்களின்படி, பிரான்சில் பதுங்கியிருந்த கஞ்சிபானை இம்ரான், பெலாரஸுக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும், பிரான்ஸ் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரான், கிளப் வசந்தவைக் கொலை செய்ய ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...