ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ( Ismail Haniyeh ) கடந்த வாரம் கொல்லப்பட்டது தொடர்பான மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டதற்கு Meta மன்னிப்புக் கோரியுள்ளது.
இஸ்மாயில் ஹனியே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவுகள் நீக்கப்பட்டதை அடுத்து Meta-விடம் மலேசியா விளக்கம் கேட்டிருந்தது.
பிரதமரின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்த உள்ளடக்கம் அகற்றப்பட்டு, சரியான செய்தி மதிப்புள்ள லேபிளுடன் உள்ளடக்கம் மீண்டும் இடம்பெற்றுள்ளதாக Meta செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ்ஸிடம் எழுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார்.
மலேசியா தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக உறுப்பினர்கள் திங்களன்று Meta பிரதிநிதிகளை சந்தித்து விளக்கம் கேட்டிருந்தனர்.
Meta -வின் செயல்கள் பாராபட்சமானது, அநீதியானது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக நசுக்குவதாகக் கருதுகிறது என்று பிரதமர் அலுவலகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.