ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால எல்லை இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை 40 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
நாளை வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். 11 மணிமுதல் 11.30 மணிவரை தமது ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும்.