ஒலிம்பிக் 2024: வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி!

Date:

நீர்ச்சத்துக்  குறைபாடு காரணமாக பாரீசில் உள்ள மருத்துவமனையில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வினேஷ் போகத்,  100 கிராம் எடை கூடுதலாக உள்ள காரணத்தினால் தகுதி  நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக  இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. குறித்த சம்பவம்  இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பதக்கத்தைப்  பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தமது  ஆறுதலைத்  தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை இரவு முழுவதும் உடல் எடையைக் குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்ட காரணத்தினால்  நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பாரீசில் உள்ள மருத்துவமனையில் வினேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...