கிளப் வசந்த படுகொலை விவகாரம்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸாா்!

Date:

கொழும்பு அத்துருகிரிய பகுதியிலுள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி, அத்துருகிரி நகரில் பச்சை குத்தும் நிலையத்தில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்தா உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தனர்.

இந்தக் குற்றச் செயல் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் மூவரின் புகைப்படங்களை பொலிஸார், ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தாருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது சங்க என்ற சந்தேக நபரும், பெட்டி ஹரம்பகே அஜித் ரோஹன அல்லது சண்டி என்ற சந்தேக நபரும், முதுவா துர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது பஹிரவயா ஆகிய சந்தேக நபர்களின் புகைப்படங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 072 422 2223 என்ற மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு அல்லது 071 859 1657 அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...