ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மானில் நடைபெற்ற ஒரு கல்விக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளை கவிதை படிப்பதற்காக ஒரு சிறுமி மேடையேறுகின்றாள்.
அப்போது மேடையில் பலஸ்தீனத்தில் காசாவிலுள்ள மக்கள் படுகின்ற துன்பங்களை தன் கவிதையால் வடிக்கிறாள். சில வசனங்களை படித்துக்கொண்டிருக்கையில் அவரால் கவலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
வாய்விட்டு அழுகிறாள். இதை கவனித்த அங்கிருந்த நகர சபை தலைவர் ஒருவர் மேடைக்கு சென்று அச்சிறுமை ஆரத்தழுவி அவரும் சேர்ந்து அழுகின்றார் இறுதியாக இந்நிகழ்ச்சி அழுகையோடு முடிவடைகிறது.
இன்று உணர்வுள்ள மனிதர்களின் உள்ளங்களை கசக்கி பிழிகின்ற செய்தியாக காசா அவலங்களை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.