எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒன்றியத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைய தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட வேண்டும்.
அதற்கிணங்க, இருதரப்பினருக்கும் இடையில் கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட்டது.