நடை பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த இளைஞனுக்கு ஜனாதிபதி பாராட்டு

Date:

நடை பவனியாக  இலங்கையை  சுற்றி வந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பாராட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

45 நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று நிறைவு செய்து அவர் சாதனை படைத்துள்ளார்.

இது இலங்கை பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்படும் முதலாவது சாதனை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பித்த ஷஹ்மி, இந்த நடைபவனியை காலி வீதியூடாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, கிழக்கிலங்கையின் பொத்துவில், அம்பாறை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை, திருகோணமலை, வவுனியா, முல்லைதீவு, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறையை தொடர்ந்து நடை பவனியாகவே பயணித்து மீண்டும் பேருவளையை வந்தடைந்து சாதனை படைத்துள்ளார்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...