பர்கினோ பசோவில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு

Date:

மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினோ பசோவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு.

பர்கினோ பசோவில், கடந்த செப்டெம்பர் மாதம் இராணும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புக்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த தீவிரவாத குழுக்கள் பாதுகாப்ப படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

அத் தீவிரவாத குழுக்களை அழிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசுக்கு ஆதரவான குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை பர்கினோ பசோவின் பர்சலொகொ மாகாணம் கயன் நகருக்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளதோடு 140 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இத் தாக்குதல் சம்பவத்துக்கு அல்கொய்தாக தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...