ஆறு மாகாண ஆளுநர்கள் இராஜினாமா: வர்த்தமானி வெளியீடு

Date:

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆறு மாகாண ஆளுனர்களின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலர் தங்களது பதவிகளை இராஜினாமாக்களை அறிவித்தனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடமேல் மாகாண ஆளுனர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...