‘சகல மக்களினதும் கலாசாரங்களை பாதுகாப்பேன்’:வெளியானது நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவினால் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது,

2024 ஜனாதிபதி தேர்தலில் நாம் எதிர்வரும் 5 முதல் 10 வருடங்களுக்கு முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை நாம் வெளியிட்டுள்ளோம்.

நாம் இயலுமானதையே செய்வோம் போலி வாக்குறுதிகளை வழங்கமாட்டோம். நாட்டின் இறைமையை பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டியது எமது கடமையாகும். நாம் அரசியல் வரப்பிரசாதங்களுக்காக செயற்படுபவர்கள் அல்ல.

30 வருடகாலத்தினை முடிவுக்கு கொண்டுவந்த அரசாங்கம் கொவிட் பரவலை வெற்றிகரமாக முறியடித்த அரசாங்கம். நாம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவோம்.

இந்த நாட்டின் தேசிய உற்பத்தியை 2 மடங்காக அதிகரிப்போம். டிஜிட்டல் முறைமையினுடாக நாட்டின் பலபிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் நாட்டில் வரிசையுகம் ஏற்படுவதை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரமுடியும்.

எமது அரசாங்கத்தில் முதல் 6 மாதங்களுக்குள் அரச சேவையினை டிஜிட்டல் மயப்படுத்துவோம். இதனூடாக மக்கள் இலகுவாக அரச சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

வரியினை குறைப்போம் அதேபோல் மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவிலேயே வரியினை நடைமுறைப்படுத்துவோம்.

டிஜிட்டல்மயப்படுத்தலின் ஊடாக ஊழலை 3 வருடங்களுக்குள் முற்றாக ஒழிக்க முடியும். டிஜிட்டல் பொறிமுறையூடாக பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வோம். 20 லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவோம்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் மரபுரீதியிலிருந்து வெளியே செல்வேன். அத்துடன், என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. இந்த நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன்.

சகல இன மக்களினதும் கலாசாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர். சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர்.

ஆனால் நான் சகல மக்களினதும் கலாசாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு கடன்  திட்டத்தினை அறிமுகப்படுத்துவோம். சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வோம். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வோம்” இவ்வாறு நாமல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் பொது வேட்பாளரின் கொள்கைப் பிரகடனமும் இன்றையதினம் வெளியிடப்படுகின்றது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...