ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டால் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு?

Date:

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானமே என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.

கட்சி யாப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் இறுதியானது என்று தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி. வி. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து, அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம்.

மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள். மாவை.சேனாதிராஜாக்கும் அறிவித்து அவரும் வருவதாக இருந்தார்.

உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை. மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது.

மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாசவுக்கு அதரவு வழங்குவது என்பது அதனையே அறிவித்தோம்.

மூத்த துணைத்தலைலவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை.சேனாதிராஜாவுடன் கதைப்பார் என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...