சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை (28) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை அணுக முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொள்கிறது: 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537.

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...